தென்னை உருவாக்கும் சுற்றுச் சூழல் சீரழிவு..
தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியை காணும் பொழுதில் மனதில் இதமும், அது தரும் மென் தென்றலும் வந்து போனாலும் அதன் மறு பக்கம் தீமையை விளைவிக்கக் கூடியது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.
மற்ற விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் நிரந்தர வருமானம் வேண்டி விவசாயிகள் பலரும் தென்னை விவசாயத்துக்கு மாறி விட்டார்கள். ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என்று குறைந்த ளவில் விவசாயம் செய்பவர்கள் கூட இன்றைய நிலையில் தென்னையை நாடிச் செல்வது தவிர்க்க முடியாமல் போய் விட்டது.
குறிப்பாக பொள்ளாச்சி உடுமலைப் பகுதிகளில் தென்னை தான் முதன்மைப் பயிர் ஆகியதால் முன்பு காங்கேயம் வரை வந்த தென்மேற்குப் பருவ மழைச் சாரல் இப்பொழுதெல்லாம் பொள்ளாச்சியைத் தாண்டுவதில்லை.
நீர் அதிகம் தேவைப்படும் தென்னையை கிணறு மற்றும் வாய்க்கால் பாசனத்தை மட்டும் நம்பி பயிரிட்டுவிட்டு பின்னர் மழை இல்லாத காலங்களில் ஆயிரம் அடி இரண்டாயிரம் அடி என ஆழ்குழாய்களை அமைத்து நிலத்தடி நீரைச் சுரண்டி வருவதால் நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. இதனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது
சமீபத்திய ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வு முடிவுகளின் படி
1.தென்னை மரங்களில் கிளைகள் இல்லாததால் பறவைகள் கூடு கட்ட முடிவதில்லை இதனால் பறவைகள் வரத்து குறைகிறது
2. அதிகம் பழங்களை மற்றும் தானியங்களை உண்ணும் பறவைகளுக்கு உணவும் கிடைக்காததால் சத்து மிகுந்த பறவைகளின் எச்சம் ஐந்து முதல் பனிரண்டு மடங்கு அளவில் மண்ணில் விழுவது தடுக்கப்படுகின்றது
3. இதனால் தென்னை மரங்களுக்கு அருகில் இருக்கும் மற்ற பயிர்கள், தாவரங்கள் மற்றும் மரங்களுக்கு சரியான அளவில் நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதில்லை. அவற்றின் வளர்ச்சி தடைபட்டு அதானால் அப்பகுதிகளில் மழை அளவும் குறைந்து சுற்றுச் சூழலில் பெரும் சீரழிவை உண்டாக்குகிறது.
தென்னை குறைப்போம்.. மண்ணைக் காப்போம்
